42 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக வாழும் கலை அமைப்பு சில நாட்களுக்கு முன் காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கும் நிலையில் தான் விலைக்கு வாங்கிய 15 ஏக்கர் நிலத்தை கைப்பற்றிக் கொண்டதாக வெளிநாட்டு வாழ் இந்தியரான பால் என்பவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
பால் என்பவர் பெங்களூருவில் உள்ள கனகபுரா ரோட்டில் அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தை நிலத்தின் உரிமையாளரான மோகன் என்பவரிடம் 12 வருடங்களுக்கு முன்பு 1.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும், மோகன் உரிமை மாற்று ஆவணம் வழங்கியதாகவும், முறையாக சட்டப் படி பதிவு செய்வதற்குள் மோகன் இறந்து விட்ட நிலையில் அவரது மகன் விஜய் நில விற்பனையை மறுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் பால் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்து அதன் தீர்ப்பு வரும் முன்னதே வாழும் கலை அமைப்பிடம் மோகனின் மகன் விஜய் நிலத்தை ஒப்படைத்து விட்டாராம். இதனிடையில் இரு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நில விவகாரத்தை தீர்ப்பதாக உறுதி அளித்த நிலையில் தற்போது கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய நிலத்தை மறந்து விட சொல்வதாகவும் பால் தெரிவித்துள்ளார்.
குமார சாமி லே அவுட் பகுதி காவல் நிலையத்தில் நேற்று இரவு பால் என்பவரின் சார்பில் பத்திரிக்கையாளர் அக்னி ஸ்ரீதர் என்பவர் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் இது குறித்து தெரிவித்த வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் '' 15 ஏக்கர் நிலத்தை விஜய் என்பவரிடம் இருந்து சட்டப் படி வாங்கியுள்ளதாகவும், பாலுக்கோ,ஸ்ரீ தருக்கோ வாழும் கலை அமைப்புடன் எந்த சம்பந்தமும் இல்லை '' என்று மறுத்துள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment