மான்டெரி: மெக்சிகோ நாட்டில் நடந்த விமான விபத்தில் அந்த நாட்டு அமைச்சர் உள்பட 8 பேர் பலியானார்கள்.
மெக்சிகோ நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஹரோசியா பாஸ்கி. அங்குள்ள நேகராஸ் நகருக்கு அவர் சிறிய ரக விமானத்தில் சென்றார். அவருடன் நகர மேயர் ஜோஸ்மா செபேஸ் உள்பட 7 அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வடக்கு மெக்சிகோவில் அலெக்ஸ் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்றனர்.
அவர்கள் சென்ற விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து கீழே விழுந்த விமானம் தரையை தட்டியபோது தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்தார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விபத்திற்கு எந்திர கோளாறுதான் காரணம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், விமானம் விழுந்த இடத்தை அன்மையில் தான் சூறாவளி தாக்கியதால், விபத்திற்கு வானிலை காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment