கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நாளை கன்னியாகுமரி வருகிறார்.
இதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது.
நாளை காலை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கார் மூலம் செல்லும் அப்துல் கலாம் படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பின்பு, நாகர்கோவிலுக்கு செல்லும் அவர், பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பவள விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நாளை மாலை 5.15 மணி முதல் 6 மணிவரை குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
அப்துல்கலாம் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment