ஆரவாரப்பேச்சிற்குப் பெயர்போன முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான் கான், தன்னை பிரதமராக்கினால் 90 நாட்களுக்குள் பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார்.
டேட்டா தர்பார் தர்கா தற்கொலைத்தாக்குதலுக்கு இரையானதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட இம்ரான் கான் இவ்வாறு செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
"தாலிபான்களை பேச்சுவார்த்தைகளுக்குள் ஈடுபடுத்தாமல் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.
ராணுவத்தினால் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது, அச்சுறுத்தலை ஒழிக்க தாலிபான்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும்.
வாஷிங்டன், தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முயன்று வருகிறது, இஸ்லாமாபாத்தும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும்." என்று கூறுகிறார் இம்ரான் கான்.
"வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது, குறிப்பாக பிற நாடுகள், இந்திய உட்பட, பாகிஸ்தானை அதன் உறுதியை இழக்கச்செய்ய இந்த சதியை பயன்படுத்திக் கொள்கின்றன.
"எனக்கு பிரதமராக வாய்ப்பு கொடுத்தால் நான் பயங்கரவாதத்தை 90 நாட்களுக்குள் ஒழித்துவிடுவேன்." என்று கூறினார் இம்ரான்.
தற்போது டெஹ்ரிக் இன்சாஃப் கட்சியை நடத்தி வருகிறார் இம்ரான். ஆனால் இந்தக் கட்சியின் சார்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒருவர் கூட தெர்ந்தெடுக்கப்படவில்லை என்பது வேடிக்கை.
"பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூட்டும் பயங்கரவாதம் குறித்த விவாதத்திற்கான தேசிய மாநாடு ஒரு விதத்திலும் பயனளிக்காது ஏனெனில் மாகாண, மத்திய அரசுகள் அமெரிக்காவின் நலனுக்கு சேவையாற்றி வருகின்றன.
முதலில் உண்மையான் பயங்கரவாதிகள் யார் என்பதையும் அமெரிக்க அடிமைகள் யார் என்பதையும் நாம் அடையாளம் காணுவது அவசியம். அதன் பிறகு தர்க்காவில் அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்."
என்று தனது கருத்தைக் கூறியுள்ளார் இம்ரான்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment