சிட்னியில் இந்திய உணவகம் மீது வெடிகுண்டு தாக்குதல் ? ; மர்மநபர்கள் தப்பி ஓட்டம்


சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பெரும் வெடி சப்தத்துடன் தீ பிடித்து எரிந்தது. இது வெடிகுண்டு தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆஸி., யில் இனவெறி தாக்குதல் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போன்ற இன வெறித்தாக்குதலை அடக்குவதில் இந்தியாவும், ஆஸி.,யும் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், இதனையும் மீறி ஆஸ்திரேலியாவில் இன வெறி தலைக்காட்டும்.
இந்த வகையில் இன்று இந்திய இளைஞர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டார். சிட்னியில் ஒரு இந்திய உணவு விடுதியிலும் வெடி குண்டு வீசப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சிட்னியில் கிளவ்லேடண்ட் தெருவில் இந்திய உணவகம் அமைந்துள்ளது. இங்கு இரவு 11. 30 மணியளவில் பெரும் வெடிசப்தத்துடன் தீ பிடித்து எரிந்தது. இதனை அருகில் உள்ள விடுதி முதலாளி நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். இங்கு பெரும் சப்தம் கேட்டதாகவும், தீப்பிழம்பு பெரும் அளவில் இருந்ததாகவும் , கூறினார். தீ பிடிக்கும் போது இந்த இடத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் ஓடுவதையும் அவர் பார்த்தததாக கூறியுள்ளார்.
உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. 2 பேர் புகை மூட்டத்தினால் மூச்சு திணறிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த உணவு விடுதிக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் இருந்து வந்ததாகவும், கூறப்படுகிறது. இந்த விடுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு வெடிகுண்டையும் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இங்கு நடந்தது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தானா என ஆராய்ந்த பின்னர்தான் சொல்ல முடியும் என்றனர் ஆஸி., போலீசார். தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: