லெபனான் அறிஞரின் மரணத்துக்கு ஆன்மீகத் தலைவர்; அனுதாபம்
அரசியல் குழு: ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் அவர்கள், அண்மையில் காலமான லெபனானின் பிரபல மார்க்க அறிஞர் சிரேஷ்ட ஆயத்துல்லாஹ் முஹம்மத் ஹுஸைன் பத்லுல்லாஹ் குறித்து தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
உள்ளக இரத்தக் கசிவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்யித் பத்லுல்லாஹ், பெய்ரூத்தின் பஹ்மன் வைத்தியசாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
லெபனான் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1982ம் ஆண்டிலிரந்து, அதன் ஆன்மீகத் தலைவராக இவர் சேவையாற்றி வந்தார்.
திங்கட்கிழமை தான் விடுத்த அனுதாபச் செய்தியில், ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள் விவரிக்கும் போது, நாட்டுக்கு மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய அம்மனிதரை லெபனான் மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர், இஸ்லாமியக் குடியரசின் சிறந்த தோழராகவும், தனது சொல் செயல் என இரண்டிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவராகவும் அவர் விளங்கினார் எனவும் செய்யித் அலி காமெனயி குறிப்பிட்டுள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment