கொச்சி:இறைத்தூதர் முஹம்மத் ரசூல்(ஸல்) அவர்களை கேலி செய்யும் விதத்தில் பி.காம்., வினாத்தாளை தயாரித்த கல்லூரி பேராசிரியர் ஜோசப்பை இரண்டு தினங்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர் கை துண்டிக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் இவரின் கை மீண்டும் பொருத்தப்பட்டது.
சிகிச்சைக்கு தேவைப்பட்ட 10 பாட்டில் ரத்தத்தையும் கேரளா ஜமாத்தார் ஏற்பாடு செய்தனர்.பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை செய்து வரும் கேரள போலீசார் திட்டமிட்டு அநியாயமாக முஸ்லிம்களையும் பி.எஃப்.ஐ நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கைது செய்வதாக தெரிவித்துள்ளது.
ஜோசப்பிற்கு பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், அவருக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க கேரள போலீஸார் தவறிவிட்டதாகவும், ஆதலால் இது போலீஸாரின் அலட்சியம் என்றும் பி.எப்.ஐ குற்றம் சாட்டியது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, போலீசார் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பி.எப்.ஐ சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ. அரசியல் அமைப்பும் கண்டித்துள்ளது.
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அஷ்ரபை விடுவிக்கக்கோரி பெரும்பாவூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் போலீஸார் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் இச்சம்பவத்தை கண்டித்துள்ளது. சர்ச்சைக்குரிய வினாத்தாளிற்கு கிறிஸ்தவ தேவாலயம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதாகவும், அதனை தொடர்ந்து கல்லூரியிலிருந்து பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் அக்கவுன்சில் நினைவுக் கூரியது.
அமைதியை சீர்குலைக்கவே சில ஆதிக்க சக்திகளால் இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது என்று ஜாமாதே இஸ்லாமி கூறியுள்ளது.குற்றம் புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் அஜ்ஜமாத் கேட்டுக்கொண்டுள்ளது.
SOURCE : twocircles.net
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment