வழக்குகளை விரைவில் முடிக்க சட்டம்
பெங்களூரு:நடுவர் மன்றம் மற்றும் சமரச மையம் தொடர்பான சட்ட திருத்தம் குறித்த மாநாடு பெங்களூருவில் நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசியதாவது:வர்த்தகம் தொடர்பான வழக்குகள் ஏராளமாக தேங்கி கிடக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வர்த்தக கோர்ட்கள் விரைவில் ஏற்படுத்தப் பட உள்ளன. இந்த கோர்ட்டுகளில் வர்த்தக வழக்குகள் மட்டுமே கையாளப் படும். இதற்கான மசோதா நிறைவேறியவுடன், இது சட்டமாக்கப்படும்.நடுவர் மன்றங்கள் மூலமாக வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.
0 comments:
Post a Comment