
ஈரான் விஞ்ஞானிகளில் ஒருவரான சஹராம் அமீர், ஒரு வருடத்துக்கு முன் கடத்தப்பட்டிருந்தார். புனித ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா சென்ற வேளை, சவூதி அரேபியாவில் வைத்து சி.ஐ.ஏ. அமைப்பினர் இவரைக் கடத்தியிருந்தனர்.
அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டு, நாடு திரும்பினார். 32 வயதான அமீர், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பெளதீகவியல் துறை விரிவுரையாளராகவும் ஈரானின் அணுசக்திச் சங்க ஊழியராகவும் கடமையாற்றியவர்.
தெஹ்ரான் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்:
"நான் உடல், உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment