அமிர்தசரஸ்:ரஷ்யாவிலிருந்து அமிர்தசரஸுக்கு வந்த துர்க்மெனிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தில் கல்யாணமாகாத 22 வயதுப் பெண் குழந்தை பெற்று அதை கழிவறையில் விட்டு விட்டு நழுவ முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவிலிருந்து வந்த அந்த விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்து சென்றது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் துப்புரவுத் தொழிலாளர்கள் விமானக் கழிவறையில் சுத்தம் செய்யச் சென்றபோது அங்கு பிறந்த குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது.போலீஸார் விமான நிலையத்தை சல்லடை போட்டு தேடியதில் குழந்தையைப் பெற்று விட்டு டாய்லெட்டில் விட்டுச் சென்ற பெண் சிக்கினார்.
அவருக்கு 22 வயதாகிறது. இன்னும் கல்யாணமாகவில்லை. காதலின் மூலம் அவருக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது தெரிகிறது.
அந்தப் பெண் மீ்து ஒரு குழந்தையின் உயிரைக்காக்கத் தவறியது மற்றும் பிறந்த குழந்தையை மரணத்தில் தள்ள முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைதுக்குப் பின்னர் அந்தப் பெண்ணையும்,அவருக்குப் பிறந்த குழந்தையையும் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு குழந்தையின் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment