ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் குறித்த இராணுவ இரகசியங்கள் கடந்த திங்கள் கிழமையன்று பெரும் அளவில் வெளியிடப்பட்டது.

அமெரிக்க இராணுவ வரலாற்றில் வெளியான கசிவுகளிலேயே மிகப்பெரிய இராணுவ இரகசியக் கசிவாகக் கருதப்படும் இந்த இரகசியங்களை விக்கிலீக்ஸ் என்ற அமைப்பு தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், பிரிட்டன் நாளிதழான கார்டியன் மற்றும் ஜெர்மனிய வார இதழான டெர் ஸ்பீஜெல் ஆகியவை தங்களுடைய இணையதளத்திலும் இவற்றை வெளியிட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சந்தித்து வரும் அடுக்கடுக்கான தோல்விகளை இந்த இரகசிய ஆவணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

320 பிரிட்டனர் வீரர்களையும் ஆயிரத்துக்கும் அதிமான அமெரிக்க வீரர்களையும் பலி வாங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மீதான போர் குறித்த சுமார் 90 ஆயிரம் நிகழ்வுகளுக்கான பதிவுகள், ஆய்வறிக்கைகள் இந்த இரகசியத் தகவல்களில் அடங்கியுள்ளன.

திங்களன்று கசிந்த இரகசியங்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் வருமாறு:

தாலிபான் தலைவர்களை எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கருப்புப் படை எவ்வாறு இயங்கும் விதம்.

தாலிபான்கள் வசம் உள்ள தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணையை அமெரிக்கா எதிர்கொள்ளும் விதம்.

தாலிபான் நிலைகள் மீது மிகவும் ஆபத்தான ரீப்பர் என்ற ஆயுதங்களை அமெரிக்காவும் கூட்டுப் படையினரும் அதிக அளவில் பயன்படுத்தும் விவரம்.

அமெரிக்க நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்கள். இத்தகைய சுமார் 144 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சிலவேளைகளில் இச்செயலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுவரை ஊடகங்களில் வெளிவராத படையினரின் துப்பாக்கிச் சூடுகள், தற்கொலைத் தாக்குதல்கள்.

2008ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் முழுவதும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது.

பேருந்து ஒன்றின் மீது அமெரிக்கப் படையினர் இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டு 15 பேரைக் கொலை செய்தது.

2007ஆம் ஆண்டு போலந்து நாட்டுப் படையினர் கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருமண வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, கர்ப்பினிப் பெண் உள்ளிட்டோரை கொலை செய்ததும் அதற்கு கிராமத்தினர் பதில் அடி கொடுத்ததும் என இதுபோன்று ஏராளமான தகவல்களையும் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெற்ற இடங்களையும் ரகசியத் தகவல்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "இராணுவ இரகசியங்களை வெளியிட்டமைக்கு நாங்கள் கடுமையான கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டமை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆவணங்கள் குறித்த தகவல்களைக் கேட்க விக்கிலீக்ஸ் அமைப்பு அமெரிக்க அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்த தகவல்கள் அமெரிக்கர் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: