சென்னை: ஈழப் போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ரஷ்யா ஆதரவு தரக் கோரி சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் கடைசிக் கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்ய ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ரஷியா ஆதரவு அளித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கைக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு இலங்கை மறுக்கிறது. அங்குள்ள அமைச்சரும் போராட்டம் நடத்துகிறார். விசாரணைக்கு மறுப்பதில் இருந்தே போர் குற்றம் நிகழ்ந்தது நிரூபணம் ஆகிறது. இந்த விஷயத்தில் ஐ.நா. பின்வாங்கக் கூடாது. இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக்கு ஆதரவாக ரஷியாவும் செயல்படுகிறது. இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு யாரும் துணை போகக்கூடாது. இந்த வேண்டுகோளை வைத்து ரஷிய துணை தூதரகத்தில் மனு கொடுத்துள்ளோம். அங்குள்ள அதிகாரிகளும் மேலிடத்திற்கு அனுப்ப ஆவன செய்வதாக கூறினார்கள்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுட்டுக் கொல்கிறார்கள். இதுவரை, 501 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு கடிதம் மூலம் தீர்வுகாண முடியாது. இலங்கையை பகை நாடாக கருதி இந்தியா போர் தொடுக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு விளையாட செல்லக் கூடாது. இலங்கை அணியும் இந்தியாவுக்கு விளையாட வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்றார் சீமான்.
Home
Uncategories
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தர வேண்டும்: ரஷ்யாவுக்கு சீமான் கோரிக்கை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment