புதுச்சேரி: சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை உத்தண்டியைச் விஜயரங்கம் ( 55), சரக்கு கப்பலில் கேப்டனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர்களது மகன் சாரதிக்கு வரும் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள உறவினர்கள், நண்பர்களை நிச்சயதார்த்ததுக்கு அழைக்க நேற்று புதுச்சேரி வந்தார் விஜயரங்கம். நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் குருசுக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் இரவில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள உடற்பயிற்சி நிலையம் அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரது முதுகு மீது வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியோடியது. இதில் விஜயரங்கம் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் விஜயரங்கத்தின் மார்பு, முதுகு பகுதியில் பலத்த காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து அங்கேயே இறந்தார்.
சம்பவம் இடத்துக்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் அருகே இருந்த உடற்பயிற்சி நிலையத்தை சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு பெரிய அரிவாள்கள் சிக்கின. குற்றவாளிகள் உடற்பயிற்சி நிலையத்தில் மறைந்திருந்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.
விஜயரங்கம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment