
போலி என்கவுண்டர் என்றாலே ஷொராஹ்ப்தீன், துளசிராம், பாட்லா ஹவுஸ் மற்றும் 2004ல் நடைபெற்ற இஸ்ரத் ஜஹான் மற்றும் மற்ற நான்கு அப்பாவிகளின் போலி என்கவுண்டர் தான் எல்லோருக்கும் மனதில் வரும். இஸ்ரத் ஜஹானின் என்கவுண்டர் வழக்கும் பரவலாக அனைவரும் அறிந்ததே.
இஸ்ரத்தின் என்கவுண்டர் வழக்கை நீதிபதி தமாங் தலைமையிலான கமிட்டி நீதி விசாரணை மேற்கொண்டு, இஸ்ரத் உள்ளிட்டவர்களின் என்கவுண்டர் போலியானது என்று அறிவித்தது.
இவ்வழக்கு இன்னும் குஜராத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது இவ்வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைப்பதா, வேண்டாமா? என்ற கோணத்தில் சென்றுக் கொண்டிருப்பதைப் பற்றி ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.
குஜராத் நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கும் இவ்வேளையில், இஸ்ரத் ஒரு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று ஹெட்லி கூறியாதாக என்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி வந்த செய்தியினை நேற்று, இன்றும் ஊடகங்களின் முதல்பக்கம் முற்றுகையிட்டது. பலர் இதனை உண்மையாக நம்புகின்றனர்.
என்.ஐ.ஏ.வின் இக்கூற்றுக்கள் தங்களை மிரட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ள இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கவுசர், தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தை இது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்ட்கப் போவதாக அறிவித்துள்ளார்.
என்.ஐ.ஏ. யை மேற்கோள் காட்டி இச்செய்தி வந்தாலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
*முதலாவதாக, இச்செய்தியை ஊடகங்களுக்கு பரிமாறிய என்.ஐ.ஏ. அதிகாரியின் பெயரோ அல்லது அதிகார்வப் பூர்வமாகவோ இச்செய்தி வரவில்லை என்பது ஆச்சிரியமளிக்கும் உண்மை.
*இரண்டாவதாக, 2006-ல் தான் ஹெட்லிக்கு லஷ்கரை தெரியும், ஆனால் இஸ்ரத்தோ 2004-ம் ஆண்டே என்கவுண்டரில் கொல்லப்பட்டது, ஹெட்லியின் அல்லது என்.ஐ.ஏ.வின் முரணான உத்தேசத்தையே காட்டுகிறது.
*மூன்றாவதாக, நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்திற்கு நேரடியாக உளவு நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாமே தவிர, வழக்கின் இஸ்திரத் தன்மையை பாதிக்கும் வகையிலோ அல்லது முடிவுகள் தீர்மானிக்கும் வகையிலோ, அரசு அலுவலகங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தால் அது சட்டப்படியான குற்றம்.
*நான்காவதாக, சி.பி.ஐ.,யிடம் இவ்வழக்கை ஒப்படைக்க நீதிமன்றம் முன்வரும் நேரத்தில், ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டரின் பாடத்தை வைத்து, சி.பி.ஐ. விசாரணையை தடுக்க விஷமிகள் சூழ்ச்சி செய்துள்ளார்களா? என்ற கேள்வியும் வலுக்கிறது.
*ஐந்தாவதாக, மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்கச் சென்ற என்.ஐ.ஏ. குழு, இஸ்ரத்தைப் பற்றி ஹெட்லி கூறியதாக வெளியிட்ட செய்தியை நம்பும்படி அளித்தாலும், ஹெட்லியின் என்.ஐ.ஏ. விசாரணை முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகும் நிலையில், மும்பை தாக்குதலைப் பற்றி ஹெட்லி கூறியதை குறிப்பிடாத என்.ஐ.ஏ., ஏன் இஸ்ரத்தைப் பற்றி – அதுவும் ஒரு மாதக் காலத்திற்கு பிறகும், குஜராத் நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் சமயத்தில் இச்செய்தி வெளிவந்தது பலத்த சந்தேகங்களை கிழப்பியுள்ளது.
*ஆறாவதாக, இவை அனைத்தும் உண்மையாக இருக்கும் சமயத்தில், ஐ.பி.,க்கு மாற்றாக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ. விழும்! ஐ.பி, ராவைப்போல விஷமிகள் புகுந்துள்ளார்களா?
*ஏழாவதாக இப்போலி என்கவுண்டர் சம்பவத்தில் மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் படியே செயல்பட்டதாகக் கூறும் குஜராத் காவல்துறையின் வாக்குமூலத்தின் படி மத்திய உளவுத்துறை தங்களின் மீது கறைபடாத வண்ணம் இவ்வாறு ஹெட்லி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாகக் கூட கூறியிருக்கலாம் என்றும் சந்தேகம் வலுக்கிறது.
*எட்டாவதாக, குஜராத் போலீஸ் இஸ்ரத்தைப் பற்றி வழக்கு ஆவணங்களில் கூறியுள்ளதை, அப்படியே வாந்தி எடுத்துள்ளான் ஹெட்லி. அப்படியென்றால் ஹெட்லிக்கும், மோடியரசிற்கும் அல்லது மத்திய உளவுத்துறைக்கும் தொடர்ந்து தொடர்பு இருந்துள்ளதா? என கேள்விகள் புரியாத புதிர்களாக நீளுகின்றன.
இஸ்ரத் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்த நிலையில், இஸ்ரத் மர்மஸ்தானத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தமாங் விசாரணை அறிக்கை கூறுகின்றது.
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் இன்று கஷ்மீர் முதல் குஜராத் வரை,குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு போலி என்கவுண்டர்களிலும், பொய் வழக்குகளிலும் தொடர்ந்து பலிகடா ஆக்கப்பட்டு வருவதை இதன் மூலம் பார்க்க முடிகின்றது.
இஸ்ரத்தின் வழக்கை பொறுத்தவரை, ஷொராஹ்ப்தீன் வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு, இதையும் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.
0 comments:
Post a Comment