தாகிர்: ஈராக்கில், அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள மதிப்பு வாய்ந்த தொல்லியல் பொருட்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்களின் அட்டகாசம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அவர்களை ஈராக் அரசால் தடுக்க இயலவில்லை.
சதாம் உசேனைப் பிடிப்பதற்காக, 2003ல் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் புகுந்தன. அப்போதிருந்து விலை மதிப்பற்ற பழங்கால தொல்லியல் பொருட்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்களுக்குக் கொண்டாட்டம் தான். தற்போதைய ஈராக்கில், சுமேரிய, அக்காடிய, பாபிலோனிய, பெர்ஷிய நாகரிகங்கள் தொடர்ந்து செழித்திருந்தன. இந்நாகரிகங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் ஈராக்கின் தென் பகுதியில் குறிப்பாக, டைக்ரிஸ் நதியின் கிழக்குப் படுகையில் உள்ளன. இங்கு, உடைந்த பானைகள், கிண்ணங்கள், குடுவைகள், கண்ணாடிகள், செதுக்கப்பட்ட கற்கள் போன்றவை கிடைத்துள்ளன; இன்னும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கப் படைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பும் நேரத்தில், அங்கு அமைந்துள்ள அரசின் பல துறைகள் இன்னும் ஸ்திரப்படவில்லை. குறிப்பாக போலீஸ் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்க இயலவில்லை. தொல்லியல் போலீஸ் துறையில் தற்போது ஐந்தாயிரம் பேர் உள்ளனர். தொல்லியல் பொருட்கள் திருடு பற்றிய தகவல்கள் அளிக்க 106 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் இடம் பரந்து விரிந்தது. குறிப்பாக, தாகிர் என்ற இடம்தான் கொள்ளையர்களால் அதிகமாக குறிவைக்கப்படுகிறது. இருப்பினும், கல்லறைகளுக்குள் தங்கம் இருப்பதாக வதந்தி பரவுவதால் தொல்லியல் இடங்கள் கொள்ளையடிப்பதும் தொடர்கிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment