வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நகரத்தில் பணிபுரியும் இந்திய கணினி விஞ்ஞானி ஒருவர், மூன்று இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தியரான திவ்யேந்து சின்கா(49) காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பயின்றவர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலுள்ள ஹோபோக்கன் என்ற இடத்திலுள்ள "ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என்ற கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., பட்டம் வாங்கியவர். தற்போது "சீமென்ஸ்' நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிகிறார். நியூஜெர்சி புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். ஜூன் 25ம் தேதி தன் வீட்டருகில் தன் குடும்பத்தாருடன் இவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு கார் இவர் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து வேகமாக இறங்கிய மூன்று இளைஞர்கள் சின்காவைக் கடுமையாகத் தாக்கினர்.
இச்சம்பவத்தில் சின்காவுடன் இருந்த அவரது இரு மகன்களுக்கும் அடி விழுந்தது. இதில் சின்கா மோசமான காயங்களுக்கு உள்ளானார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அமெரிக்கச் சட்டப்படி அவர்களது விவரங்கள் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரி ப்ரூஸ் கப்ளான் கூறுகையில்,"இது இனவெறித் தாக்குதல் அல்ல' என்று தெரிவித்துள்ளார். எதற்காக சின்கா தாக்கப்பட்டார் என்பது விசாரணை முடிந்த பின்தான் தெரிய வரும் என்று நியூஜெர்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment