மதுரையில் அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி : பஸ் டிரைவர்கள் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
மதுரை : மதுரையில் அரசு பஸ் டிரைவரை திருமண கோஷ்டியினர் செருப்பால் அடித்து அவமரியாதை செய்ததால் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பி்த்தது. மதுரை பெரியார் நிலையம் - ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வேன் ஒன்றை டிரைவர் திடீரென யு டர்ன் செய்தார். அப்போது மாடக்குளத்தில் இருந்து வந்த அரசு பஸ்சுடன் வேன் மோதப் பார்த்தது. அரசு பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வேன் டிரைவருடன் சண்டை போட்டார். ஆத்திரமடைந்த வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் டிரைவரை செருப்பால் அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த டிரைவர் மற்ற டிரைவர்களுக்கு தகவல் தெரிவித்தார் . அந்த வழியில் வந்த அனைத்து பஸ்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து ஸதம்பித்ததுபோலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு போக்குவரத்து சீரானது.
0 comments:
Post a Comment