அகத்தீஸ்வரம்: கன்னியாகுமரி அருகே அகத்தீஸ்வரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியை அடுத்த அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் அகத்தீஸ்வரத்திற்கு அருகில் உள்ள பூஜபுரைவிளையில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார்.
இதில் 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 18 பெண் குழந்தைகள் உள்பட 32 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இக்காப்பகத்தில் தங்கி படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றுபேர் தாங்கள் கொடுமைப்படுத்தபடுவதாகவும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் நாகராஜன், நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் சகிலா பானு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரி, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் பால்துரை, தென்தாமரை குளம் எஸ்.ஐ. ஜெசி ஆகியோர் அகத்தீஸ்வரம் சென்று அந்த காப்பகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சிறுவர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டதும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளில் 16 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெஸ்டினை கைது செய்தனர். ஜெஸ்டின் கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment