கடலூர்: பிரபல ரவுடி மேல்குப்பம் சங்கருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் போலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். போலீஸ்காரரை தாக்கி விட்டு பாலத்திலிருந்து குதித்ததில் ரவுடி சங்கருக்கும் கால் முறிந்தது.
கடலூர் மாவட்டம் மேல் குப்பத்தைச் சேர்ந்தவன் சங்கர். பிரபல ரவுடி 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன்.
இன்று காலை இவனை போலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவர் பார்த்து வழிமறித்து பிடிக்க முயன்றார். இதையடுத்து அவருக்கும், ரவுடிக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
இதில் தன்னிடமிருந்த வீச்சரிவாளால் ராஜேந்திரனை ஓங்கி வெட்டினான் சங்கர். இதில் ராஜேந்திரனின் கையில் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் சுதாரித்துப் பிடிக்க முயன்றார் ராஜேந்திரன்.
அவரிடமிருந்து தப்ப பாலத்திலிருந்து கீழே குதித்தான் சங்கர். இதில் அவனது கால் முறிந்து போனது.
படுகாயமடைந்த ராஜேந்திரனும், சங்கரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரிடமிருந்து வீச்சரிவாள், 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Home
Uncategories
கடலூர்: போலீஸ்காரரை வெட்டிய பிரபல ரவுடி சங்கர்-பாலத்திலிருந்து குதித்து கால் முறிவு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment