
சென்னை : "தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை' என, நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தேர்தல் கமிஷன், தேர்தல் பணியில் ஈடுபடுவதில் இருந்து 25 ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளதாக சில ஊடகங்களில் வந்துள்ள செய்தி தவறானது.
சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி தேர்தல் பணியில் ஈடுபடுவதையோ, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் அல்லது ஒரே மாவட்டத்தில் பணியாற்றுபவரையோ தேர்தல் பணியில் நியமிக்காமல் இடமாறுதல் செய்வதை தேர்தல் கமிஷன் கொள்கையாகக் கொண்டுள்ளது.இந்த மாற்றங்களும், தேர்தல் தேதி தொடர்பாக மாநில அரசுக்கு தேர்தல் கமிஷன் எழுதிய பின் தான் அமலுக்கு வரும். இதுதவிர, ஏற்கனவே தேர்தல் கமிஷனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில்லை.எனவே, தற்போதைய நிலையில், அதிகாரிகளை கறுப்பு பட்டியலில் வைப்பது அல்லது தடை விதிப்பது என்ற கேள்வியே எழவில்லை.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment