கேரளாவில் அண்ணல் நபிகளாரைக் களங்கப்படும் விதமாக கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சாக்காக வைத்து பாப்புலர் ஃபிரண்டின் கேரள மாநிலத் தலைமையகம் உட்பட பல கிளை அலுவலகங்களில் போலீஸ் சோதனை செய்தது.
கோழிக்கோடு ராஜாஜி சாலையிலுள்ள அலுவலகத்திற்கு நகரபோலீஸ் கமிஷ்னர் பி.விஜயன், கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் சௌக்கத் அலி, சி.அசைனார் ஆகியோரின் தலைமையில் வந்த போலீஸ் ஒன்றரை மணி நேரம் சோதனையைத் தொடர்ந்தது.
கோழிக்கோட்டில் மட்டும் சுமார் 25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதல்லாமல் திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காஸர்கோடு ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃபிரண்ட், எஸ்.டி.பி.யை. அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன.
சுதந்திர தின அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகளின் சி.டி.கள்,பொது விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த துண்டறிக்கைகள்,புத்தகங்கள் போன்றவை கிட்டியதாக போலீஸ் அறிவித்தது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment