
சர்ச்சிலிருந்து வீட்டிற்கு காரில் திரும்ப வந்துக் கொண்டிருக்கும் வழியில் மூவாற்றுப்புழையில் அவரின் காரின் மீது 8 பேரடங்கிய கும்பல் தாக்குதல் தொடுத்தது. கை மற்றும் காலில் வெட்டுபட்ட ஜோஸஃப், அருகிலுள்ள எர்ணாகுளம் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துண்டிக்கப்பட்ட கையை இணைப்பதற்காக அவசர அறுவை சிகிட்சை அவருக்கு நடத்தப்பட உள்ளது.
ஜோஸஃப் மீது தாக்குதல் நடக்கும் போது, அவருடன் காரில் அவரின் தாயாரும் கன்னியாஸ்திரியான அவரது தங்கையும் உடனிருந்தனர். தாக்குதல் தொடுத்தவர்கள், ஜோஸஃபின் தாய் மற்றும் சகோதரியை எதுவும் செய்யாததிலிருந்து, அவர்களின் குறி ஜோஸஃப் மட்டுமே என்பது உறுதியாகிறது.
கார் ஜோஸஃபின் வீட்டு முன் வரும் வேளையில், காரின் முன்னிலையில் பட்டாசு வெடித்து அருகிலுள்ளோரை அகற்றியப்பின்னர் ஜோஸஃபை மட்டும் சுற்றி நின்று தாக்கியதாக அவரின் சகோதரி கூறினார்.
பி.காம் தேர்வுக்காக தயார் செய்த கேள்வித்தாளில் முஹம்மது நபியைக் கேலி செய்யும் விதத்திலான கேள்விகளை ஜோஸஃப் சேர்த்திருந்தார். இந்தச் சம்பவத்தில் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து எம்.ஜி. பல்கலை அவரின் ஆசிரியர் அனுமதியை ஒரு ஆண்டுக்கு ரத்து செய்தது. மேலும் இச்சம்பவத்தில் அவர் மீது வழக்கும் நிலுவையில் இருந்தது. வழக்கு தொடுக்கப்பட்ட காலத்தில், தலைமறைவாக இருந்த ஜோஸஃபைக் காவல்துறை "தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில்" இணைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment