அந்தமான் தீவுகளில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நேற்று நள்ளிரவில் தாக்கிய இந்த பூகம்பத்தின் அளவு 5.2 ரிக்டராக இருந்தது. இருப்பினும் இதன் காரணமாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.
போர்ட்பிளேரிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அந்தமான் கடலில் பூகம்பத்தின் மையம் இருந்ததாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவை சுனாமி தாக்கியதற்குப் பிறகு அந்தமானில் தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment