சொராப்தீன் போலி என்கவுண்டர் குறித்த வழக்கை முன்னர் விசாரணை செய்த குஜராத் மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந்த கீதா ஜோஹ்ரி சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகளான டி.ஜி. வன்ஜரா, ராஜகுமார் பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோருக்கு எதிராக முக்கிய சாட்சியங்களைத் திரட்டியவர் கீதா ஜோஹ்ரி ஆவார். ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி சிபிஐயின் விசாரணைக்காக ஆஜராகுமாறு ஜோஹ்ரிக்கு சிபிஐ வியாழக் கிழமையன்று சம்மன் அனுப்பியுள்ளது.
மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந் ஜோஹ்ரி தற்போது ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக உள்ளார். சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை சிபிஐ முன் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
சொராப்தீன் போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குஜராத் மாநில டிஜிபியாக இருந்த பி.சி. பாண்டே ஆகஸ்டு 11ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று முறை சிபிஐயால் அமித்ஷா விசாரிக்கப்பட்டுள்ளார். இதுவரை எதையுமே ஒப்புக்கொள்ளாத அமித்ஷா, "எனக்கு எதுவுமே நினைவில்லை" என்று திரும்பத் திரும்ப கூறுவதாக சிபிஐ கூறுகிறது. அத்துடன், அமித்ஷா விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment