
குமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று குமரி மாவட்டம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் களியக்காவிளை வந்தார். அங்கு எஸ்.பி. ராஜேந்திரன், டி.ஆர்.ஓ. கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வில்லியம் தாமஸ் இறைவேண்டல் செய்தார். கிரேஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பிரான்ஸ் ஜாய் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்துல்கலாம் பேசியதாவது:
மாணவர்களிடம் புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி மலரவேண் டும். என்னால் முடியும் என்ற மன உறுதி வேண்டும். புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் என்ற உறுதியே இளைய சமுதாயத்தின் அஸ்திவாரம். கடின உழைப்பால் தோல்வியை தோல்வியுறச்செய்து நாட் டை வளமாக்க வேண்டும்.
இந்தியாவில் 54 கோடி இளைஞர்கள் உள்ளனர். நமது நாட்டில் எல்லா வளமும் உள்ளது. முடியும் என்ற நம்பிக்கையை கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண் டும். அதன் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும். இளைஞர்கள் நல்ல எண்ணங்களுடனும், தூய்மையான உள்ளங்களுடன் ஒன்று பட்டு உழைத்தால் 2020 இந்தியா வை வல்லரசு நாடாக்க முடியும். எழுச்சி பெற்ற மாணவர்களை உருவாக்குவதுதான் கல்வி நிறுவனங்களின் வேலை. அதற்காக கல்வி நிறுவனங்கள் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கிரேஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஜெயசிங்பால், மற்றும் கிரேஸ் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment