
கொல்லம்: பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் முன்ஜாமீன் மனுவை பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த நசீர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நசீரிடம் பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் மதானியை 31வது குற்றவாளியாக பெங்களூர் போலீசார் சேர்த்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு பெங்களூர் விரைவு நீதிமன்றத்தில் மதானி மனுதாக்கல் செய்தார். குண்டு வெடிப்பில் மதானிக்கு முக்கிய பங்கு இருப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து மதானியின் முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் கொல்லத்திலும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மதானி கூறியுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் இவருக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.
source : thats tamil
0 comments:
Post a Comment