ஐ.என்.எஸ். கொச்சி – அணு ஆயுதப் போர்க் கப்பல் நாளை படையில் சேர்ப்பு
வியாழன், 17 செப்டம்பர் 2009( 18:45 IST )
எதிரியின் இராடாரில் எளிதில் சிக்காத திறனும், அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் வல்லமை கொண்டதுமான ஐ.என.எஸ். கொச்சி என்ற புதிய போர்க் கப்பல் நாளை இந்தியக் கப்பல் படையில் இணைகிறது.
ஸ்டீல்த் டெஸ்ட்ராயர் என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்த தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ். கொச்சி, முழுமையாக இந்தியாவின் தயாரிப்பாகும். மும்பையில் உள்ள மாஸ்கோவான் கப்பல் கட்டுமானத் தளத்தில் இக்கப்பல் கட்டப்பட்டது. 6,500 டன் எடை கொண்ட இக்கப்பல், இந்தியக் கடற்படையில் தற்போது சேவையில் உள்ள ஐ.என்.எஸ். டெல்லி, ஐ.என்.எஸ். மைசூர், ஐ.என்.எஸ். மும்பை ஆகியவற்றிற்கு இணையான எதிரியின் கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டதாகும். இக்கப்பல் இந்தியக் கப்பற்படையின் கப்பல் வடிவமைப்பு இயக்குனரகத்தால் வடிவமைக்கப்பட்டது.
எதிரியின் இராடாரில் எளிதில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பல், அதிவேக பிரம்மோஸ் அணு ஆயுத ஏவுகணை, தரை மற்றும் விண் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை ஏவும் வல்லமை கொண்டதாகும் என்று இக்கப்பல் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பற்படை கடைபிடித்துவரும் மரபின்படி, இக்கப்பலை இந்திய கப்பற்படையின் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மாவின் மனைவியான மதுலிகா வர்மா நாளை துவக்கி வைக்கிறார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment