சென்னை, ஜூன் 30:தெற்கு ரெயில்வே நாளை முதல் 20க்கும் மேற்பட்ட புதிய ரெயில்களை அறிமுகம் செய்கிறது. பல ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதுடன், ரெயில் சேவையும் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் தீபக் கிஷன் தெரிவித்துள்ளார்.
.
தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று வெளியிடப் பட்டது. இந்த அட்டவணையை பொது மேலாளர் தீபக் கிஷன் வெளியிட, உயர்அதிகாரிகள் பட்நாயக், ராமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அட்டவணையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தெற்கு ரெயில்வேயின் புதிய ரெயில் கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. வழியில் எங்கும் நிற்காத துரந்தோ ரெயில்கள் 2 அறிமுகப்படுத்தப்படுகின்றன. சென்னையிலிருந்து கோவைக்கும், எர்ணாகுளத்திலிருந்து லோகமான்யதிலக் என்ற இடத்திற்கும்
இந்த ரெயில்கள் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் பகல் 1.30 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கத்தில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரெயில் அதிகாலை 3.05 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னைஹால்டியா வாரந்திர ரெயில், சென்னை சென்ட்ரல்ஜல்பாய்குரி, கோவைதிருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (3 நாட்கள்), மதுரைதிருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரத்தில் 2 நாட்கள்), திருச்சிமங்களூர் (வீக்லி), நாகர்கோவில்பெங்களூர் (வீக்லி), பாண்டிச்சேரிஹவுரா (காட்பாடி வழி வீக்லி), கோழிக்கோடு திருவனந்தபுரம், எர்ணாகுளம் புனே (வாரம் இருமுறை) உள்ளிட்ட 9 ரெயில்கள் புதிதாக விடப்படுகின்றன.
நல்லாம்பூர்ரோடு சோரனூர், திருச்செந்தூர் திருநெல்வேலி, மயிலாடுதுறை தஞ்சாவூர், கோழிக்கோடு கன்னூர், கோவை பொள்ளாச்சி ஆகிய 6 புதிய பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. சென்னைதிருப்பதிநெல்லூர் இடையே புதிய மின்சார ரெயில்
வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இதேபோல சேலத்துக்கும் காட்பாடிக்கும் இடையே 6 நாட்களும், கோவைக்கும் ஈரோடுக்கும் இடையே 6 நாட்களும், எர்ணாகுளத்திற்கும் கொல்லத்துக்கும் இடையே 6 நாட்களும் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணத்துக்கும், கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கும், கடற்கரைதிருத்தணிக்கும் ரெயில்கள் அதிகரிக்கப்படுகின்றன. மேலும் பல ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வே புதிதாக 254 பயணிகள் ரெயில்களையும், 658 மின்சார ரெயில்களையும் கடந்த ஆண்டு இயக்கியுள்ளது.
கடந்த ஆண்டில்மட்டும் 18 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். ரூ.2354 கோடி இதன் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.270 கோடி வருவாய் கிட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 2230 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 13.12 சதவீதம் அதிக வருவாய் கிடைத்தது. கடந்த 3 மாதத்தில் 239 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு, இதன் ரூ.13 கோடி லாபம் கிட்டியுள்ளது.
நெல்லைக்கும் தென்காசிக்கும் இடையிலும், மயிலாடுதுறைக்கும் திருவாரூர் இடைக்கும் அகல ரெயில் பாதை பணிகள் அடுத்த மார்ச் மாதம் முடிவடையும். இதேபோல மானாமதுரை விருதுநகர் இடையே 66 கிலோ மீட்டர் அகல ரெயில் பாதை பணியும் முடிவடைய உள்ளது.
செங்கல்பட்டு விழுப்புரம் இரு வழிப்பாதை பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும். சேலத்துக்கும் நாமக்கல்லுக்கும் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கும். நாகப்பட்டினத்துக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையே ரெயில் போக்குவரத்து விரைவில் துவங்கும்.
அண்மையில் விழுப்புரம் அருகே ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து ரெயில் பாதை பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு ரெயில்வே காவல்துறை முடுக்கிவிடப்பட்டு ரெயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment