உளுந்தூர்ப்பேட்டை: உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி ரூ. 80,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்ப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து இன்று அங்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படை விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தியது. இந்தசோதனையின்போது பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 80,000 பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கு விசாரணையும், சோதனையும் நடந்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த இந்த அதிரடி ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment