ஒளரங்காபாத் (மகாராஷ்டிரா) மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத் மாவட்டத்தில் மதரசாவின் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழநதனர். 10க்கும் மேற்பட்ட சிறார்கள் காயமடைந்தனர்.
ஒளரங்காபாத் மாவட்டம் கங்காபூர் பகுதியில் ஒரு இஸ்லாமிய மதரசா உள்ளது. அங்கு ஏரளாமான சிறார்கள் படித்து வருகின்றனர். நேற்று அங்கு சிறார்கள் இருந்தபோது திடீரென மதரசாவின் சுவர் இடிந்து விழுந்தது.
இந்தத் தகவல் பரவியதும், கிராம மக்கள் ஓடி வந்தனர். மீட்புப் பணிகளில் அவர்களே ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருந்த ஐந்து சிறார்களின் உடல்களை அவர்கள் மீட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து மதரசா நிர்வாகிகள் கூறுகையில், தகவல் அறிந்ததும் கிராம மக்கள் ஓடி வந்து விட்டனர். இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பாகுபாடில்லாமல் அனைவரும் இணைந்து மீட்புப் பணிகளில் உதவினர் என்றனர்.
விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 நிதியும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 10,000 நிதியுதவியும் அளிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
SOURCE : THATS TAMIL
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment