சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் தனிமையில் இருந்த காதலர்களைச் சூழ்ந்த ஒரு கும்பல் காதலியை கற்பழிக்க முயற்சித்தது. அந்த முயற்சியில்,காதலர் படுகொலை செய்யப்பட்டார். காதலியிடமிருந்த பொருட்களைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.
சென்னை மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் நடந்துள்ள இந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் ..
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய அத்தை தனலட்சுமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.
அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார் சரவணன். அப்போது அதேபகுதியில் வசிக்கும் நான்சி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. நான்சி பி.சி.ஏ முடித்து விட்டு சர்ச் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
காதலியைப் பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை வருவார் சரவணன். அப்போது அவரும், நான்சியும், ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
அதேபோல நேற்றும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. காதலர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த அவர்களிடம் நெருங்கி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், நான்சியை கற்பழிக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்றார் சரவணன். இதையடுத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அக்கும்பல். இதில் சரவணன் அங்கேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்து நான்சி கதறினார். அதை கண்டுகொள்ளாத அக்கும்பல் நான்சி அணிந்திருந்த தங்க் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.
தகவல் போலீஸாருக்குக்கிடைத்ததும் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.
கொலையாளிகள் ரவுடிக்கும்பலாக இருக்கக் கூடும். அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார்ச ந்தேகிக்கின்றனர்.
சென்னையில் உள்ள பல்வேறு பறக்கும் ரயில் நிலையங்கள் ஏதோ பாழடைந்த மாளிகை போலத்தான் காணப்படுகிறது. பல ரயில் நிலையங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இருப்பதில்லை.
அரசு அலுவலகங்கள், புதிய தலைமைச்செயலகம் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் பகுதியான சேப்பாக்கம் ரயில் நிலையத்திலேயே பல நேரங்களில் தனியாக போக முடியாது. அந்த அளவுக்கு ஆளரவமற்று இருக்கும்.
இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் தனியாகவரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளிடம் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடும்நிலை ஏற்படுகிறது.
இதைத் தடுக்க ரயில்கள் வரும், போகும் நேரம் வரையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.
SOURCE : THATS TAMIL
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment