மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் நிதின் கார்க் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மெல்போர்ன் நகரில் கடந்த ஜனவரி 2ம் தேதி க்ரூய்க்ஷாங்க் பார்க்கில் நடந்து சென்று கொண்டிருந்த நிதின் கார்க்கை ஒருகும்பல் கத்தியால் குத்தி விட்டுத் தப்பியது. அவர்களிடமிந்து தப்பிய நிதின் கார்க் வழியிலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில் நிதின் கார்க்கின் மரணம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவையே முறித்துப் போடுமளவுக்கு நிலைமை போனது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது யாராவில்லி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் யார் என்ற அடையாளம் தெரிவிக்கப்படவில்லை.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment