ராமேஸ்வரம் : ராமாநதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள விமானப்படைத் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
விமானப்படை தள வேலியை உடைத்து அவர் உள்ளே புகுந்தார். அவரது பெயர் சுரேஷ்குமார் பாரி. சட்டிஸ்கர் மாநிலம் அம்பிகாபூரைச் சேர்ந்தவர். ஜூன் 25ம் தேதி இரவு அவர் விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்தார்.
இதைப் பார்த்து விட்ட விமான தள ஊழியர்கள் அவரைப் பிடித்து லெப்டினென்ட் கமாண்டர் பியூஷ் மாலிக்கிடம் ஒப்படைத்தனர். அவர், சுரேஷ்குமாரை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அந்த நபரிடமிருந்து எந்தவிதமான ஆயுதமோ, அபாயகரமான எதுவுமோ கைப்பற்றப்படவில்லை. அந்த நபர் எதற்காக விமான தளத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment