
இந்தியா - பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து இருநாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற ஜூலை 14 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலர் சல்மான் பசீர் ஆகியோர் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அயலுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி வருகிற ஜூலை 14 ஆம் தேதியன்று இப்பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்காக எஸ்.எம்.கிருஷ்ணா அன்றைய தினம் இஸ்லாமாபாத் செல்ல உள்ளார்.
இது தொடர்பாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 2010 ஏப்ரல் மாதம் திம்புவில்( பூடான்) இந்திய - பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருநாடுகளின் அயலுறவுத் துறை செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை அதிகரிக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபடி, கிருஷ்ணா ஜூலை 14 ல் பாகிஸ்தான் பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment