
ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்காக என்று சொன்னாலும், அணுகுண்டையும் தயாரிக்கவல்ல செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
யுரேனியத்தை செறிவூட்டுவதை ஈரான் கைவிடவேண்டும் என்று ஈரானை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வந்தன.
ஆனால் உலக நாடுகளின் இந்த எதிர்ப்பையும் மீறி 20 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களது நாடு தயாரித்து உள்ளதாக ஈரானின் அணுசக்தி தலைவர் அலி அக்பர் சலேகி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துக்காக என்ற பெயரில் நாங்கள் அணுகுண்டு தயாரிக்க இருக்கிறோம் என்று தான் பல நாடுகள் நாங்கள் யுரேனியம் செறிவூட்டுவதை எதிர்த்தன.நாங்கள் அமைதி நோக்கத்துக்காக தான் அதை செறிவூட்டி இருக்கிறோம்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணு உலைக்கூடத்துக்கான எரிபொருளை நாங்களே தயாரிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment