சாலை விதிகளை மீறியதால் காவல்துறையினருக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினரை அடித்து உதைத்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் காவல்துறையினர் சரிசெய்து கொண்டிருந்த வேளையில், அவ்வழியாக வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரின் கார், போக்குவரத்து விதியை மீறிச் சீறிப்பாய்ந்ததாகவும் காரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசி அடித்த ராஜ் குமாரைக் காவல்துறையினர் இணைத்து நடுரோட்டிலேயே அடித்து உதைத்து காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினரை வைத்திருந்த காவல்நிலையத்தைச் சூறையாடிய பாஜகவினர், ராஜ் குமார் எம்.எல்.ஏவை காவல்நிலையத்திலிருந்து கடத்திச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு உத்தரகண்ட் மாநில அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. காவல்நிலையத்தைச் சூறையாடிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment