மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஒருவரின் தாயையும் அவரது சகோதரியையும் உயிருடன் எரித்துக் கொலை செய்ததாக மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் நால்வரை மேற்கு வங்க காவல்துறையினர் திங்கள் கிழமையன்று கைது செய்துள்ளனர்.
கமலா ஹேம்பரம் (85 வயது) மற்றும் சரஸ்வதி (55 வயது) ஆகிய இருவரையும் உயிருடன் எரித்துக் கொலை செய்தததாக ஜெய்சிங் பாஸ்கே, மான்சிங் பாஸ்கே, சிரிபதி சோரன் மற்றும் சோம்லால் மான்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் நபீன் ஹேம்பரம் என்பவரின் வீட்டை இவர்கள் எரியூட்டினர் என்றும் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியபோது, ஹேம்பரம் மட்டும் வீட்டில் இருந்து தப்பி உயிர் பிழைத்தார் என்றும் மற்றவர்கள் உயிருடன் தீவைத்துக் கொல்லப்பட்டனர் என்றும் காவல் துறை கூறுகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment