நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்ததாகவும் மேலும் பல்வேறு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட போலிச் சாமியார் நித்தியானந்தா, பெங்களூரு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவுக்குப் பின் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று அவரைப் பயபக்தியுடன் வணங்கினார்.
போலிச்சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து போலிச் சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் தலைமறைவாயினர். போலிச் சாமியார் நித்தியானந்தாவை நாடுமுழுவதும் தேடிவந்த காவல்துறையினர், இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து அவரைக் கைது செய்து பெங்களூரு சிறையிலடைத்தனர். நடிகை ரஞ்சிதா இதுவரை பிடிபடவில்லை.
சிறையிலடைக்கப்பட்ட நித்தியானந்தாவுக்கு பெங்களூரு நீதிமன்றம், "பக்தர்களுக்குப் போதனை செய்யக்கூடாது" என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனைகளை கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இதையடுத்து நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றக் கிளம்பி விட்டார்.
சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்றுமாலை பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் தன் பக்தர்களிடையே நி்த்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
"சுதந்திரம்" என்ற தலைப்பில் அவராற்றிய உரையில், தன் மீதான செக்ஸ் புகாரை மறுத்ததோடு அது தன் மீதான திட்டமிட்ட சதி என்றும் பக்தர்கள் அவற்றைக் கண்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம் என்றும் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சொற்பொழிவுக்குப் பின், அவர் பேச்சைக்கேட்க கூடியிருந்தவர்களில் பலரும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களில் நடிமை மாளவிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொற்பொழிவின் போது நித்தியானந்தாவின் முகத்தில் வெட்கம், கூச்சம், கோபம் என எந்த உணர்ச்சியும் காட்டாமல் மிக இயல்பாக பேசியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment