புது தில்லி : குஜராத் முதலமைச்சர் மோடியை காப்பாற்றவே மோடியும் பாஜகவும் சேர்ந்து குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பலிகடாவாக்கி விட்டனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அமித் ஷாவும் மோடியும் சிபிஐயை காங்கிரஸ் வளைத்து வழக்கு போட வைப்பதாக கூறுவது பொறுப்பற்றதனமாகும். வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது நீதிமன்றம் நிச்சயம் மோடியை குற்றவாளியாக்கும். அதிலிருந்து தப்பிக்கவே அமித் ஷாவே முன்வந்து கைதானதன் மூலம் மோடியை காப்பாற்ற நினைக்கின்றனர் என்றார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹ்மது.
இன்னொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில் முதலில் 2007-ல் குஜராத் காவல்துறை தலைவர் கீதா ஜோஹ்ரி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை படித்தாலே யார் குற்றவாளி என்பது தெரியும். தலைமறைவானதற்கு பதில் அதையாவது படித்திருக்கலாம்” என்றார்.
ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள அமித் ஷா தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்றும் மோடி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் திட்டம் என்றும் தாம் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment