வன்புணர்வு வழக்கில் மத போதகர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் வன்புணர்வு வழக்கில் மதபோதகர் கைது செய்யப்பட்டார். பெண்களை ஏமாற்றி அவர்களுடன் `செக்ஸ்' உறவு வைத்ததோடு, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் ``பெயித் அசெம்பிளி'' என்ற பெயரில் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது. இதில் 150 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சபையில் போதகராக பணியாற்றியவர் செல்வராஜன்.

இந்த சபைக்கு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், கோவில் கட்டியதில் கடன் பட்டு விட்டதாக சொல்லி, சபை உறுப்பினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும் செல்வராஜன் மீது புகார்கள் வந்தன. இவர் மீது இந்த சபையைச் சேர்ந்த 2 பெண்கள் அயனாவரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.

கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, செல்வராஜன் தன்னிடம் கடந்த 6 வருடங்களாக செக்ஸ் உறவு வைத்ததாகவும், மேலும் தன்னிடம் 5 சவரன் நகைகளையும், ரூ.3 லட்சம் பணமும் ஏமாற்றி விட்டார் என்றும் ஒரு பெண் குறிப்பிட்டு இருந்தார்.

மற்றொரு பெண் கொடுத்த புகாரில், தான் செல்வராஜனிடம் குமாஸ்தாவாக மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி, செல்வராஜன் ஏமாற்றி என்னை கற்பழிக்க முயற்சித்தார் என்றும், ரூ.63 ஆயிரம் பணத்தையும், 5 சவரன் நகைகளையும் ஏமாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்..

இந்த 2 புகார்கள் மீதும் மத்திய சென்னை இணை ஆணையர் தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் லட்சுமி, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், ஆகியோர் மேற்பார்வையில் அயனாவரம் ஆய்வாளர் ரமேஷ் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தார். கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி, மோசடி, மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் செல்வராஜன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: