சென்னை : கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதி அன்சாரியை மீண்டும் புழல் சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் அகில உலக ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை சிறையில் உள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனையடுத்து அக்குடும்பத்தாரின் கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த திருமிகு ஷியாம் சுந்தர் அவர்களை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார்.
(தற்பொழுது ஷியாம் சுந்தர் அவர்கள் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார் )
சிறைத்துறை அமைச்சர் அவர்கள், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வீணாக ஆர்ப்பாட்டம், போராட்டம் ஏதும் நடத்தாமல் முறையாக அணுகி சிறைக்கைதிகளின் கோரிக்கையினை அன்போடும், தகுந்த முறையிலும் உரிய இடத்தில் சேர்க்கும் முறை வரவேற்கத்தக்கது" என்று பாராட்டு தெரிவித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment