இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண் வீராங்கனை உடல் கண்டுபிடிப்பு

லண்டன்:இங்கிலாந்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பெண் கிளாடியேட்டர் ஒருவரின் உடல் கிடைத்துள்ளது.ரோமப் பேரரசர்கள் ஆட்சியில், ஒரு மைதானத்தில் பல்லாயிரக் கணக்கானோர் காணும்படி, ஒரு வீரனுடனோ அல்லது மிருகத்துடனோ மோதி வெற்றி பெறுபவர்கள் "கிளாடியேட்டர்' என்று அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்த வீர விளையாட்டைக் காண்பது ஒரு சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது.கி.பி.,193ல் இருந்து 211 வரை ரோமப் பேரரசராக இருந்த செப்டிமியஸ் செவரஸ் என்பவரது ஆட்சி, இங்கிலாந்து வரையிலும் பரவி இருந்தது.



இவரது ஆட்சியில்தான், பெண்களும் கிளாடியேட்டராக இருக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் கி.பி., 200ல் அதற்குத் தடை கொண்டு வரப்பட்டது.தொல்லியல் ஆய்வாளர் ராபின் ஜாக்சன் என்பவர் தலைமையிலான குழுவினர், ஹியர்போர்டுஷைர் என்ற இடத்தில் உள்ள "கிரெடன் ஹில்' என்ற பகுதியில் அகழாய்வு செய்து கொண்டிருந்த போது, ஒரு சவப் பெட்டியில் எலும்புக் கூடு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.இதுபற்றி ராபின் கூறுகையில்,"முதலில் அந்தப் பெட்டியைத் திறந்த போது கால் மற்றும் கை எலும்புகள் தெரிந்தன. அதை வைத்து அந்த உருவம் ஆஜானுபாகுவாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.



தொடர்ந்து அதன் இடுப்பு மற்றும் தலை எலும்புகளை வைத்து அது ஒரு பெண்தான் என்பதைக் கண்டறிந்தோம். ஆய்வின் முடிவில், அந்தப் பெண் கிளாடியேட்டராக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்' என்று தெரிவித்தார்.ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சிறப்புடன் திகழ்ந்த கென்செஸ்டர் என்ற நகரத்தின் புறநகர்ப் பகுதியில் தான் இந்த எலும்புக் கூடு கிடைத்துள்ளது. ஆனால் இதுபோன்ற கிளாடியேட்டர்கள், ரோமர்கள் வழக்கப்படி நகரின் எல்லையிலுள்ள இடுகாட்டில்தான் புதைக்கப்படுவர். இந்த வழக்கத்திற்கு மாறாக, பெண் கிளாடியேட்டர் உடல், புறநகர்ப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.



அக்காலகட்டத்தில், இப்பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதனால், புறநகர்ப் பகுதி வரை மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பெண் வைக்கப்பட்டிருந்த மரத்தாலான சவப்பெட்டி தற்போது öŒல்லரித்துக் காணாமல் போய்விட்டாலும், அதன் ஓரங்களில் இருந்த பித்தளை சட்டங்கள், சவப் பெட்டி மிகுந்த வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.இந்த கண்டுபிடிப்பின் மூலம், அப்பகுதியில் ரோமர்கள் ஆட்சிக் காலத்தில் அதிகளவில் கட்டடங்கள், சரக்கு வைக்கும் இடங்கள் ஆகியவை முறையாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: