ஈரானில் இருவருக்கு தூக்கு தண்டனை
டெஹ்ரான்:போதை மருந்து, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அமானுல்லா பவுரியன் மற்றும் யூனுஸ் ரஹ்மானி இருவரும் போதை மருந்து, ஆயுதம் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக ஈரான் எல்லையைக் கடக்க முயன்றனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஈரானின் தென்கிழக்கு நகரமான ஜகேடனில் பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஈரானின் ஷரியத் சட்டப்படி, கற்பழிப்பு, கொலை, ஆயுதக் கடத்தல், போதை மருந்து கடத்தல் மற்றும் கலப்படம் போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 270 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 84 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment