சென்னை, ஜூலை 4: பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, புதிய சட்டம் உருவாக்கப்படும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கூறினார்.
பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனிச் சட்டம் உருவாக்குவதற்காக, 2-வது சட்ட முன் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த சட்ட முன் வரைவு குறித்து பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்கும் வகையில், இறுதி கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில் வீரப்ப மொய்லி மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment