இலங்கையின் பிரபல இஸ்லாமிய மதகுரு மரணம்!


இலங்கையின் பிரபல மார்க்க அறிஞரும், ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான ஆலோசகருமான அல்ஹாஜ் மௌலவி எஸ். நியாஸ் முஹம்மத் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். சனிக் கிழமையன்று பண்டாரவளைக்கு வைபவம் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அவர் இன்று காலை மரணம் அடைந்ததாக தெரியவருகின்றது.

இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத்,கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.

1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். பல்வேறு அமைப்புக்கள், ஏனைய சமூகங்கள், நிறுவனங்களினூடாக அவர் தேசகீர்த்தி,தேசமான்ய,கீர்த்திஸ்ரீ,சாம மான்ய,தேசபந்து போன்ற கௌரவப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட மௌலவி நியாஸூக்கு மரணிக்கும் போது வயது 57 ஆகும்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: