அணு உலைகள் விவகாரம் -முக்கியப் பேச்சு வார்த்தைக்கா சீனா செல்கிறார் சர்தாரி!


பாகிஸ்தானுக்கு அணு உலைகள் வழங்கும் சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் மேலும் பல பிராந்திய முக்கியத்துவம் மிக்க பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எதிர் வரும் செவ்வாய் கிழமை சீனா செல்ல இருப்பதாக பாகிஸ்தான் வெளியறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு அணு உலைகள் வழங்க வேண்டாம் என இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததது. அமெரிக்காவும் இது தொடர்பான தனது கவலையினை தெரிவித்து வந்தது. இந்தியாவை விட பாகிஸ்தான் அதிக அளவு அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்கள் கூறியிருந்தன.

சீனா பாகிஸ்தானுக்கு அணு உலைகள் வழங்கும் செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதுவராக சிவசங்கர் மேனன் சில நாட்களுக்கு முன்பு சீனா சென்றார். சீனப் பிரதமர் வென் ஜியாபோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜியுச்சி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய தரப்பிலான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் அழுத்தமாக எடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபரின் சீன விஜயமும் முக்கியத்துவத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: