அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் என்ஜினீயரிங் காலியிட தகவல்கள் வெளியீடு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் என்ஜீனியரிங் கவுன்சிலிங்கில்காலியாக உள்ள இடங்கள் குறித்து பல்கலைக்கழக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பி. இ. பட்டபடிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான அட்டவனையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சிவில், மெக்கானிக்கல் போன்று 47 பாடப் பிரிவுகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 945 இடங்கள் உள்ளன. இந்த இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த இடங்களை நிரப்புவதற்காக தினமும் 4 முதல் 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் நிரப்பப்பட்டது போக மீதியுள்ள காலியிடங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. காலியிடங்கள் பற்றிய தகவல்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த தகவலின் மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியில் இடம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment